மணிப்பூரில் கலவரத்தின்போது உக்ருல் காவல்நிலையத்தில் இருந்து சூறையாடப்பட்ட 80 சதவீத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

80% of firearms looted during Ukhrul violence recovered: Manipur police

மணிப்பூரில் கடந்தாண்டு மே 3ம் தேதி மெய்டீஸ், குக்கி, நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்ட இனக்கலவரம் தற்போது குறைந்திருந்தாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதன்படி கடந்த 2ம் தேதி சுவச் அபியான் திட்டத்தின்கீழ் சர்ச்சைக்குரிய ஒரு நிலத்தை சுத்தம் செய்வது தொடர்பாக நாகா இனத்தை சேர்ந்த இரண்டு கிராமத்தினரிடையே கலவரம் மூண்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. இந்த கலவரத்தின்போது உக்ருல் காவல்நிலையத்துக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த 20 துப்பாக்கிகளை சூறையாடி சென்றது.

Manipur Police Recover Arms And Explosives | Ukhrul Times

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை ஆய்வாளர் ஐகே முய்வா, “20 துப்பாக்கிகளில் 16 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலவரம் நடந்த பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *