சென்னை: கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்த பின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்; மக்கள் மீதான பொருளாதார சுமையை குறைக்கவே முதல்வர் மருந்தகங்களை திறக்க திட்டமிட்டோம். சுதந்திர தினத்தன்று நான் அறிவித்த முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கு உதாரணம் தான் இந்த முதல்வர் மருந்தகங்கள். நீரழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.