வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சத்ய நாதெல்லாவுக்கு ரூ.665.15கோடி சம்பள தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியரான சத்ய நாதெல்லா இருந்து வருகின்றார். கடந்த ஜூலை 19ம் தேதி மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பல வணிகங்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்கள் தங்கள் சாதனங்களில் புளூ ஸ்கிரீன் ஆப் டெத் என்ற பிரச்னையை எதிர்கொண்டனர்.
பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்ட போதிலும் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லாவின் 2024ம் ஆண்டுக்கான சம்பளத்தொகுப்பு ரூ.665.15கோடி என்று அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 63 சதவீத உயர்வாகும். அவர் பணியில் சேர்ந்ததில் இருந்து கிடைக்கப்பெற்ற அதிகபட்ச சம்பள உயர்வாகும்.