பெங்களூரு: ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் பெங்களூரு மற்றும் மும்பையில் 30 இடங்களில் ஜிஎஸ்டி மோசடி குறித்து சோதனை நடத்தியதில், ரூ.3,200 கோடி மதிப்பிற்கு ஜிஎஸ்டி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிஎஸ்டி என்றால் என்ன? 8 பாயிண்டுகளில் ஒரு பருந்து பார்வை | What is GST  means, an explaination - Tamil Oneindia

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி, பங்குச்சந்தைகளில் இந்த போலி நிறுவனங்களைப் பட்டியலிட்டிருக்கின்றனர். போலி ’இன்புட் டேக்ஸ் கிரெடிட்’ மூலம் ரூ.665 கோடியை பெற்று மோசடி செய்திருக்கின்றனர். போலி இன்வாய்ஸ் மூலம் மொத்தம் ரூ.3,200 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *