வயநாடு : வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக அங்கீகரித்து கேரள அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது ஒன்றிய அரசு.
பேரிடராக அறிவிக்கப்பட்டாலும், கேரள மாநிலத்துக்கான சிறப்பு நிவாரண நிதியுதவி குறித்து எந்த அறிவிப்பும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மாநில பேரிடர் நிதியில் இருந்து அதற்கேற்ற இழப்பீடு தொகையை வயநாடு பேரிடருக்கு பயன்படுத்தும்படி கடிதத்தில் தெரிவித்துள்ளது.