2023-24 ம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை 83% அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2022-23 ல் ரூ.2360 கோடி நன்கொடை பெற்ற பாஜக, கடந்த ஒரே ஆண்டில் ரூ.4,340 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
ரூ.4,340 கோடி நன்கொடையில் ரூ.1,700 கோடி நன்கொடை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2,211 கோடி செலவு செய்துள்ளதாக பாஜக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான நன்கொடையும் ரூ.452 கோடியில் இருந்து ரூ.1,225 கோடியாக அதிகரித்துள்ளது.