இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023” மற்றும் “பாரதிய சாக்ஷியா சட்டம் 2023” என மாற்றப்பட்டு, 1-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

The three new criminal law Bills: Missed opportunities and misplaced  priorities – The Leaflet

இந்த புதிய 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும் இந்த சட்டங்கள் அவசர கதியில் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இவை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என்று அறிவிக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சூழலில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் இந்த சட்டங்களை நிறைவேற்றியிருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், செந்தில் குமார் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “எந்த விவாதமும் இல்லாமல் இந்த சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசியலமைப்பு பிரிவு 348-ன் படி அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் மட்டும்தான் இயற்றப்பட வேண்டும்.சமஸ்கிருதத்தில் சட்டங்களை இயற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, ” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Cyclone Michaung | Madras High Court declares a holiday for all courts in  Chennai today - The Hindu

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. சட்டங்களை கொண்டு வரும் முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்து இருக்க வேண்டும். புதிய குற்றவியல் சட்டங்களை தொடர்பாக 4 வாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும், “இவ்வாறு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *