சென்னை : 3-ம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்காதீர் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை எனக் கூறி நிவேதா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு பிரிவில் மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரரின் விண்ணப்பத்தை இரு வாரங்களில் பரிசீலிக்க மாணவர் சேர்க்கை குழுவுக்கு நீதிபதி தண்டபாணி ஆணையிட்டுள்ளார்.