மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 16வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கருதி புதிய மசோதாவை அரசு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி 16வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் இணைய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்று 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கும் எக்ஸ், டிக்டாக், பேஸ்புக், ஸ்நாப்சாட் உள்ளிட்ட தளங்களுக்கு 150மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கவும் மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா மீது வருகிற கடந்த இரண்டு நாட்களாக விவாதம் நடந்த நிலையில் நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் பதிவாகி இருந்தன.