இந்த நிலையில், நாடாளுமன்ற விவாத்தத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சிதான். ஆனால் அவரின் உண்மையான உணர்வுகள் குறித்தும் கட்சி பேச வேண்டும்” என எதிர்க்கட்சிகளை சாடினார். அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ மனுஸ்மிருதியை நம்புபவர்கள் கண்டிப்பாக அம்பேத்கருடன் முரண்படுவதில் ஆச்சர்யமில்லை” என எழுதியிருக்கிறார்.