சென்னை: அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீபெரும்புதூர் ஏரோஹப் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் ஏரோஸ்பேஸ் பூங்காவில் உள்ள ஏரோஹப் ஏப்ரல் 2025-ல் செயல்பட தொடங்கும். விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளுக்கு ஏரோஹப் உதவும் என்றும், ஏரோஹப் வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு, பொறியியல் மையம், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் வளாகம், திறன் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதி கொண்டிருக்கும். ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதியாகும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த பூங்கா, 250 ஏக்கர் பரப்பளவில் சாலைகள், மழைநீர் வடிகால், மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது. இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்; முதற்கட்டமாக ரூ.250 கோடியில் 5.54 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *