காத்மாண்டு: நேபாளத்தில் 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்தனர். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது.

Nepal plane crash LIVE updates: 18 dead, all were staff of Saurya Airlines  | Hindustan Times

ஓடுதளத்தில் சென்றபோதே கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விமான தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது. விபத்தில் சிக்கிய விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 19 பேர் இருந்தாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pilot only survivor of fatal Nepal plane crash - BBC News

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீயை அணைத்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் விமான விபத்தில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி சாக்கியா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த அனைவரும் சவுர்யா ஏர்லைன்ஸ் ஊழியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விமான பறக்க தயாரான போது ஓடுதளத்தில் வழுக்கி விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மறு விநாடியே விமானத்தில் தீப் பற்றியதால் நிலைமை மோசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்து நடைபெற்றதை அடுத்து, திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

Nepal plane crashes during takeoff: What we know so far

பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்தில் 2010ல் இருந்து, தற்போது வரை 12 விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அடிக்கடி மாறும் தட்ப வெப்பநிலையால், விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *