அலங்காநல்லூர் : உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகள் பாரம்பரியமிக்க வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட விழா குழுவும் , மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்துள்ளனர். 500 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர்.

Alanganallur Jallikattu begins/அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

முன்னதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து அலங்காநல்லூர் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிறந்த வீரர், காளைக்கு பரிசு; உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்தெடுக்கப்படும் காலைக்கும் முதல்வர் சார்பில் டிராக்டர் வழங்கப்படுகிறது, சிறந்த வீரராக தேர்தெடுக்கப்படும் மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் சார்பில் கார் வழங்கப்படுகிறது. மேலும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, மெத்தை, அண்டா, பித்தளை பொருட்கள் என மேலும் பல பரிசு பொருட்கள் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை; முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 7 கவுண்டர்கள் மூலம் கால் நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தயார் நிலையில் மருத்துவத்துறை; ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடையும் காளைகளுக்கு, மாடு பிடி வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்க 200 மருத்துவர்கள், 60 கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

2000 போலீசார் பாதுகாப்பு; அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை காவல் ஆணையர் தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *