வாரணாசி: தமிழ்நாடு திரும்ப முடியாமல் வாரணாசி ரயில் நிலையத்திலேயே மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகின்றனர். கும்பமேளாவுக்கு செல்லும் கூட்டத்தால் தமிழ்நாடு வர முடியாத சூழலில் உள்ள தங்களை மாநில அரசு அழைத்துவர உதவ கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி வாரணாசியில் நடைபெற்றது. தென்னிந்தியா அணி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டனர்.

 

Tamilnadu cricket team players got stuck in varanasi - வாரணாசியில் முன்பதிவு ரயில்களை ஆக்கிரமித்த கும்பமேளா பக்தர்கள்! சென்னை திரும்ப முடியாமல் தவிக்கும் ...

போட்டியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா காவேரி எக்ஸ்பிரஸில்  சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தனர். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியவில்லை. ரயிலில் ஏற முடியாத நிலையில் வாரணாசி ரயில் நிலையத்திலேயே தமிழ்நாடு வீரர்கள் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் தங்களை மாநில அரசு அழைத்துவர உதவ கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாரணாசியில் தவிக்கும் தமிழ்நாடு வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்துவர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *