இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான காலக்கெடு மார்ச் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 மே மாதம் மெய்டீஸ் மற்றும் குக்கி இன மக்கள் இடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் பரவியது. பல மாதங்கள் நீடித்த வன்முறை சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடு, உடமைகளை விட்டு விட்டு வேறு இடங்களுக்கு சென்றனர்.
இதையடுத்து 300க்கும் அதிகமான ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான காலக்கெடு நேற்றுமுன்தினம் முடிவடைந்தது. இந்த நிலையில் இதை மார்ச் 6ம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு வரும் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.