புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: புருனேவுக்கு வரலாற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து சிங்கப்பூர் செல்கிறார்.
இப்படி அடிக்கடி விமானத்தில் பறக்கும் அவர் எப்போது மனிதாபிமான பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பதற்றமான மணிப்பூருக்கு அவர் செல்வாரா? மணிப்பூரில் வன்முறை வெடித்து இன்றுடன் சரியாக 16 மாதங்கள் ஆகிவிட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்கின்றனர். அங்கு தவிக்கும் மக்களையும், சமூக குழுக்களையும், அரசியல் கட்சிகளையும் சந்தித்து பேசவும் மணிப்பூர் செல்லவும் இன்னமும் பிரதமர் மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது.
போர் சூழல் நிறைந்த உலக நாடுகளில் அமைதியை ஏற்படுத்த முடிகின்ற பிரதமர் மோடியால் வன்முறையால் பாதித்த மணிப்பூரில் மட்டும் ஏன் அதை செய்ய முடியவில்லை?இவ்வாறு கூறி உள்ளார்.