வாஷிங்டன்: டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

How Elon Musk's endorsement of Trump may have backfired

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸூம் போட்டியிடுகின்றனர். தான் ஆட்சி அமைத்தால், தன்னுடைய நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்குவேன் என்று ட்ரம்ப் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார். சேவை செய்ய தயாராக இருப்பதாக எலான் மஸ்க்கும் பதிலளித்தார்.

இந்நிலையில், ட்ரம்ப் அமெரிக்க அரசு துறைகளின் செலவினங்களைக் குறைக்க தனியார் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைக்க திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தக் குழுவில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், பெட்எக்ஸ் முன்னாள் சிஇஓ பிர்ட் ஸ்மித், ஹோம் டிபோட் முன்னாள் சிஇஓ ராபர்ட் நாடெல்லி உள்ளிட்ட முக்கிய புள்ளிகளை இடம்பெறச் செய்ய ட்ரம்ப் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Inside Donald Trump and Elon Musk's growing alliance | The Australian

இந்நிலையில், இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “பல்வேறு அரசு துறைகளில் தேவையற்ற செயல்பாடுகள் நிறைய உள்ளன. அவை களையப்பட வேண்டும். இதில்பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *