முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சென்னையில் ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என ஃபோர்டு நிறுவன அதிகாரிகளிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். முதலமைச்சரின் வலியுறுத்தலை ஏற்று சென்னை தொழிற்சாலையில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்குகிறது .ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதால் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும்.
மீண்டும் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஃபோர்டு விரைவில் வெளியிட உள்ளது.