சென்னை : திமுக – விசிக கூட்டணி தொடர்பாக, ஆதவ் ஆர்ஜூனா கூறிய கருத்துக்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆதவ் ஆர்ஜூனாவிற்கு விசிகவில் உயரிய பொறுப்பு.. தொல்.திருமாவளவன் அதிரடி  அறிவிப்பு..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணி குறித்து தனியார் தொலைக் காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது, குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும், தமிழக அமைச்சரவையில் விசிக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்களை ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

ஆதவ் ஆர்ஜூனா கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரவிக்குமார், ““திமுக – விசிக கூட்டணி எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல, அது ஒரு கொள்கைக் கூட்டணி. விசிக இல்லையென்றால் வடமாவட்டங்களில் திமுகவால் தேர்தலில் வெல்ல முடியாது என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்து உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, அரசியல் முதிர்ச்சியற்றது.

தொகுதி பங்கீடு இழுபறி: முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு |  Constituency tussle - Thirumavalavan meets Chief Minister Stalin -  hindutamil.in

கூட்டல் கழித்தல் கணக்குக்கு மாறாக கொள்கை அடிப்படையிலேயே திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதை அணுக வேண்டும்.

தமிழ்நாடு புதுவை உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற திமுகவும் முக்கிய காரணம்.திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெல்ல விசிக உதவியது என்பது உண்மை. அதேபோல, விசிகவுக்கு2 MPக்கள், 4 MLAக்கள் இருப்பது திமுக உடனான கூட்டணியால்தான்”இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *