ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக எந்த மனித உரிமை மீறல்களும், பாலின பாகுபாடுகளும் இல்லை என தலிபான் அரசு கூறி உள்ளது.

Afghanistan Highlights: Taliban says it has surrounded resistance fighters  in Panjshir, calls for peace | World News - The Indian Express

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, மிதமான ஆட்சியை வழங்குவதாக உறுதி அளித்தனர். ஆனாலும், பெண்கள், சிறுமிகள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது, பொது இடங்கள் செல்லவும், சில வேலைகளில் ஈடுபடவும் தடை, பொது இடத்தில் முகத்தை காட்டவோ, குரல் எழுப்பவோ தடை என பல மனித உரிமை மீறல் மற்றும் பாலின பாகுபாடு உத்தரவுகளை விதித்துள்ளது.

இதை கண்டித்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் தலிபான் அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பரிந்துரையை நியூயார்க்கில் நடக்கும் ஐநா பொதுச் சபை கூட்டத்தில் முன்மொழிந்துள்ளன. இதற்கு 20 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதற்கு பதிலளித்த தலிபான்களின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பிட்ராத் அளித்த பேட்டியில், ‘‘ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

Emergency Appeal For Displaced Afghan Women and children | Chuffed |  Non-profit charity and social enterprise fundraising

யாரும் பாரபட்சமாக நடத்தப்படவில்லை. தப்பி ஓடிய சில பெண்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பிரசாரம் செய்து, நிலைமையை தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். ஷரியத் சட்டத்திற்கு ஏற்ப எங்களின் ஆட்சி நடக்கிறது’’ என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *