புதுடெல்லி: தொடர்ந்து 14வது நாளாக நேற்று 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்திய விமான நிறுவனங்களை குறிவைத்து சமூக ஊடகங்கள் மூலமாக தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதில் 14வது நாளாக நேற்று சுமார் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
ஆகாசா ஏர் நிறுவனத்தின் 15 விமானங்களுக்கும், இண்டிகோவின் 18, விஸ்தாராவின் 17 விமானங்களுக்கு மிரட்டல் வந்ததாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் இண்டிகோவின் 2 விமானங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அகமதாபாத், மும்பைக்கு திருப்பி விடப்பட்டன. நேற்று வரை 14 நாளில் இதுவரை 350க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.