பெய்ஜிங்: சீனாவின் ஜூவாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் ஏராளமானவர்கள் நேற்று முன்தினம் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வேகமாக வந்த கார் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக மோதியது.
இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய காரின் ஓட்டுனர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பெயர் பான் என்றும், அவர் விவகாரத்தானவர் என்றும் தெரியவந்துள்ளது. இது விபத்தா? அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதலா? என்பது உடனடியாக தெரியவில்லை.