திருச்சி: கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருச்சி சோமரசம்பேட்டையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க, ரூ.50 அல்லது ரூ.100 கோடி கொடுங்க என கேட்கின்றனர். நெல், அரிசி விற்பதுபோல பேசுகிறார்கள். கூட்டணி குறித்து நான் பார்த்து கொள்கிறேன் என இபிஎஸ் கூறி விட்டார்.
கூட்டணி பற்றி நீங்கள் பேட்டி கொடுத்து அதை கெடுத்து விட வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். எடப்பாடி அண்ணன் என்ன கூப்பிட்டு நீங்க பேட்டி கொடுத்து கூட்டணியை கெடுத்துடாதீங்கனு சொன்னாரு.. ” பேட்டி கொடுத்தா அப்புறம் கட்சியை விட்டே நீக்கிடுவாரு எங்கள. இப்படி கொடுமை போய் கொண்டு உள்ளது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், பொறுப்பு வேண்டும். கூட்டணி விவகாரத்தில் நரக வேதனையில் உள்ளார். கள ஆய்வு என்பது நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதுதான்..
ஆகவே, நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு கட்சிக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும். சசிகலா தான் முதலமைச்சர்ன்னு செய்தி வந்தது.. அப்பறம் பெங்களூர்ல இருந்து 4 வருஷம் சிறைன்னு உத்தரவு வந்ததும் அவங்க ஜெயிலுக்கு போறாங்க.. அந்த இடத்துல எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார்ன்னு கடவுள் உத்தரவு போடுறாரு என்று கூறினார்.