Author: Tamil Kelvi

“வங்கதேசத்தில் திரும்பும் இயல்பு நிலை”

வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்பியதையடுத்து ஒரு மாதத்திற்கு பின்னர் கல்வி நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. வங்கதேத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டம் வன்முறையாக மாறியதில் 650 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.…

“இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் பணியிடங்கள் ” – யுபிஎஸ்சி-க்கு ராகுல் காந்தி கண்டனம்!

இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் 45 பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணை செயலாளர்கள், 35 இயக்குனர்கள் மற்றும் துணை செயலாளர்கள் என 45 அதிகாரிகள் லேட்ரல்…

” பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.”- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: “கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எந்தவிதமான…

” தலிபான்கள் ஆட்சியில் 14 லட்சம் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம்”

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வௌியேறிய பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து தலிபான் அரசு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி முதலில் 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள்…

“திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்” – முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி கண்டீஷன் !

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ’40/40 தென் திசையின் தீர்ப்பு’ புத்தகம் வெளியீடு செய்யப்பட உள்ளது. சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான…

” அதிமுக அவசர செயற்குழு கூட்டம்” – ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக தீர்மானம் ! 9 தீர்மானங்கள் !

சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிலையில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்…

” தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் ” – உலக நாடுகள் அதிர்ச்சி, இதுதான் காரணம் !

தாய்லாந்து நாட்டில் ஏப்ரல் மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது பிக்சிட் சியூன்பான் என்பவருக்கு பிரதமர் ஷெரத்தா அமைச்சரவை பதவியை வழங்கினார். அமைச்சராக பொறுப்பேற்ற பிக்சிட், கடந்த 2008ம் ஆண்டு முன்னாள் பிரதமர் தக்சின் தொடர்பான வழக்கில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற…

” நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது” – கர்நாடக முதல்வர் சித்தராமையா !

கர்நாடகா: நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் நடந்த சுதந்திர தின விழா அம்மாநில முதல்வர் கொடியேற்றினார். பின்னர் உரையாற்றிய…

“10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் அன்புமணி” – இதுதான் காரணம் !

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலைத்தை பசுமை பூங்காவாக மாற்றக்கோரி, சென்னை அரும்பாக்கத்தில் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை பாமக தலைவர் அன்புமணி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது 30…

” ஜோ பைடனை விட கமலா ஹாரிஸ் மிகவும் செயல்திறமையற்றவர்” – டொனால்ட் டிரம்ப் !

வஷிங்டன்: அதிபர் ஜோ பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸ் மிகவும் செயல்திறமையற்றவர் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன்…