Author: Tamil Kelvi

தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு ?

டெல்லி: ரகசியம் காக்கும் விதமான தேர்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவத்தில் நன்கொடை பக்கத்தில் தேர்தல் பத்திரம் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2018ம் ஆண்டு கொண்டு…

ஆட்டோ கட்டண உயர்வு – முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் தொடர்பாக தொழிலாளர் நலச்சங்கத்தினர் உடன் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். புதிய…

எலான் மஸ்குக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் – இதுதான் காரணம் !

வாஷிங்டன்: அமெரிக்க அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்குக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மஸ்குக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வாஷிங்டனில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் – காங்கிரஸ் கட்சி விமர்சனம் !

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமிப்பது குறித்த மத்திய அரசின் அறிவிப்பு ‘அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு’ என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையரை பரிந்துரைக்கும் குழு குறித்த உச்ச நீதிமன்றத்தின் விசாரணையைத் தவிர்க்கவே பாஜக தலைமையிலான…

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று இந்தியா வருகை !

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 119 இந்தியர்கள் இன்று பஞ்சாப் வந்தடைகின்றனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா நாடு கடத்தியதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

“ஈஷா யோகா சட்ட விதிகளை மீறி செயல்பட்டால் தமிழ்நாடு அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்” – உச்ச நீதிமன்றம் !

புதுடெல்லி: கோவை ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் பூர்ணிமா கிருஷ்ணா “சுமார்…

“பாஜ மாநிலத் தலைவர் பதிவியிலிருந்து அண்ணாமலை நீக்கம் ?” – விவரம் இதோ !

கோவை: கோவையில் கடந்த 1998 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு, ஆர்.எஸ்.புரம் பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை, கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு…

” வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி இல்லாத அதிமுகவுக்கு வாய்ப்பு ” – டிடிவி.தினகரன் !

தேனி: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி இல்லாத அதிமுகவுக்கு வாய்ப்பு உள்ளது என டிடிவி.தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூரில் நேற்று நடந்த அமமுக ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்றார். பின்னர் அவர் கூறுகையில்,…

மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு ஒப்புதல் !

வாஷிங்டன்: மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், ஒபேராய் ஓட்டல்,நரிமன் இல்லம், சிஎஸ்எம்டி ரயில்…

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு புறப்பட்டார் மோடி !

வாஷிங்டன்: அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தாயகம் புறப்பட்டார். பிரான்ஸ் பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர்…