லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் சதீஷ் மஹானா நேற்று கூறும்போது,’ சட்டப்பேரவை நுழைவாயிலில் ஒரு உறுப்பினர் பான்மசாலா துப்பியுள்ளார். நான் இங்கு வந்து அதை சுத்தம் செய்ய வைத்தேன். அந்த எம்.எல்.ஏ.வை வீடியோவில் பார்த்திருக்கிறேன், ஆனால் யாரையும் அவமானப்படுத்த விரும்பவில்லை. எனவே, நான் அவரது பெயரை குறிப்பிடவில்லை.
இந்த அவையை சுத்தமாக வைத்திருப்பது நமது பொறுப்பு. சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ. தானாக முன் வந்து, இதைச் செய்ததாக ஒப்புக்கொண்டால், நல்லது. இல்லையேல் நான் சம்மன் அனுப்பி அவரை வரவழைப்பேன். 25 கோடி மக்கள் சட்டப்பேரவை மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை எம்எல்ஏக்கள் நினைவில் கொள்ள வேண்டும்’ என்றார்.