கொல்கத்தா: டாணா புயல் காரணமாக கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்பதால் இன்றே விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. டாணா புயல் மேற்குவங்கம், ஒடிசாவில் நெருங்கிவருவதால் விமான சேவைகள் நிறுத்தம். பலத்த மழையுடன் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Cyclone Dana LIVE Updates: Evacuation underway as storm set to make  landfall on Friday morning – India TV

வங்கக்கடலில் உருவாகிய டாணா புயல் இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மழை பெய்து வருகிறது. இந்த புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இரண்டு மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டாணா புயல் காரணமாக காற்று 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள டாணா புயல் நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பிதர்கனிகா தேசிய பூங்கா மற்றும் தம்ரா துறைமுகம் இடையே மிக கடுமையான தாக்கம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டாணா புயலின் தாக்கம் பெரியளவில் இருக்கும் என்பதால் ஒடிசாவில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

Airport planning - Arup

மேற்கு வங்கத்தில் 1.10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயலை எதிர்கொள்ள ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக மொத்தம் 56 அணிகள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *