டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு எம்.பி.க்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக, காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியை ஏற்கமாட்டோம், மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என வைகோ தலைமையில் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Tamil Nadu MPs protest in black clothes over inadequate funds to the State - The Hindu

வைகோ, டி.ஆர்.பாலு, கனிமொழி, திருமாவளவன், என்.ஆர்.இளங்கோ, துரை வைகோ, சுப்பராயன், நவாஸ்கனி, ராபர்ட் புரூஸ், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், விஷ்ணுபிரசாத், அண்ணாதுரை, அருண் நேரு, தங்க.தமிழ்ச்செல்வன், எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். மாநிலங்களவை எம்.பி.க்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ, கல்யாணசுந்தரம் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *