வாஷிங்டன்: உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த ஜூன் 7ம் தேதி இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய 2 வீரர்களுடன் ஸ்டார்லைனர் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது. அடுத்த 8 நாளில் சுனிதா உட்பட 2 வீரர்களும் ஸ்டார்லைனர் மூலம் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில், விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. இதனால் இருவரும் மாத கணக்கில் விண்வெளியில் சிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
உலகம் முழுவதிலுமிருந்து வெள்ளை மாளிகையில் இன்று ஒளியின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். ISSல் இருந்து பூமியிலிருந்து 263 மைல் தொலைவில் தீபாவளியைக் கொண்டாடும் தனித்துவமான வாய்ப்பைப் பெறுவதாகக் கூறிய அவர், தீபாவளி மற்றும் பிற இந்தியப் பண்டிகைகளைப் பற்றி தனது தந்தை தனக்கு எப்படிக் கற்றுக் கொடுத்தார் என்றும் தனது இந்திய வேர்களை நினைவு கூர்ந்தார். அவர் தனது கலாச்சார வேர்களை வைத்து பகிர்ந்து கொண்டார் என்றும் கூறினார்.