Category: உலக அரசியல்

தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் சான்பிரான்சிஸ்கோவில் அடக்கம் !

நியூயார்க்: அமெரிக்காவில் மரணமடைந்த பிரபல தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் சான்பிரான்சிஸ்கோவில் அடக்கம் செய்யப்பட்டது. உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் நுரையீரல் பாதிப்பு காரணமாக அமெரிக்கா,சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காததால்…

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தைகள் – 3 நாளில் பல லட்சம் கோடி இழப்பு !

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள், தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் சரிவைச் சந்தித்தன. நேற்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 964 புள்ளிகள் சரிந்து 79,218 ஆகவும், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 247 புள்ளிகள் சரிந்து 23,952…

புற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா ! – அடுத்த ஆண்டு அறிமுகம் !

மாஸ்கோ: உலகம் முழுவதும் தற்போது உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் புற்று நோய்க்கு ரஷ்யாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கு எதிரான எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது. 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த தடுப்பூசி…

பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் – பெரும் பரபரப்பு !

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்ததாக கூறி பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது. 1971ம் ஆண்டு நடந்த போரில் பல ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தனர். வங்கதேசமும் விடுதலை பெற்றது. இந்த…

பிரான்சை புரட்டிப்போட்ட புயல் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி?..அதிர்ச்சித் தகவல் !

கேப் டவுன்: ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள மயோட் தீவை வெள்ளி, சனியன்று பயங்கர புயல் தாக்கியது. சிடோ என பெயரிப்பட்ட இந்த புயல் மயோட்டி தீவை புரட்டிப்போட்டுள்ளது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு பின் தீவு இதுபோன்ற…

வங்கதேசம் : காணாமல்போன 3,500க்கும் மேற்பட்டோர் ; அதிர்ச்சித் தகவல் !

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் டாக்டர். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசினா ஆட்சியில் ஏராளமானோர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாக தகவல் வௌியாகி…

“இது மட்டும் நடந்தால் பில்கேட்ஸ் திவாலாகி விடுவார்” – எலான் மஸ்க் கருத்து !

நியூயார்க்: டெஸ்லா நிறுவனம் வளர்ந்தால் பில்கேட்ஸ் திவாலாகி விடுவார் என்று எலான் மஸ்க் கருத்து தெரிவித்து உள்ளார். உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்கிற்கும், பிரபல தொழில் அதிபர் பில்கேட்சுக்கும் இடையே தொழில் போட்டி உள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா…

” டொனால்ட் ட்ரம்ப்புக்காக எலன் மஸ்க், ரூ.2,120 கோடி செலவு” – இதுதான் காரணம் !

அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்புக்காக தொழிலதிபர் எலன் மஸ்க், ரூ.2,120 கோடி செலவு செய்ததாக அதிபர் தேர்தல் பிரசார செலவு தொடர்பாக வெளியிட்டுள்ள செலவின விவரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த குழுக்களுக்கும், தேர்தல்…

கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை,,,அச்சத்தில் மக்கள் !

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. அமெரிக்காவின்…

ஆப்கானிஸ்தானில் மருத்துவம் படிக்க பெண்களுக்கு தடை – பிரபல கிரிக்கெட் வீரர் வருத்தம் !

ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்ததற்கு, அந்நாட்டு ரஷித் கான் வருத்தம் தெரிவித்து, உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கன் பெண்கள் தங்களது கல்வி…