Category: அரசியல்

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல், 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆந்திராவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவில் நாளை முதல்…

இந்தியா – பாகிஸ்தான் போர்? : நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு !

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போருக்கு தயாராகி வரும் பதற்றமான சூழலில், நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எதிரிநாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின்…

சிங்கப்பூரில் தொடர்ந்து 14வது முறையாக ஆளுங்கட்சி வெற்றி !

சிங்கப்பூரில் தொடர்ந்து 14வது முறையாக ஆளுங்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சிங்கப்பூர் கடந்த 1965ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடர்ந்து மக்கள் செயல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 97…

அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட டிரம்ப் அரசுடன் பேச்சுவார்த்தை !

அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட டிரம்ப் அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 250 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கை கைவிடக் கோரும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய வேகத்தில் பேச்சு நடந்தால் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கு…

பஹல்காம் தாக்குதல் எதிரொலி : பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை நிறுத்தியது இந்தியா!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை இந்தியா நிறுத்தியது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. இதில், 60 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி…

வரிவிதிப்பு – அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிப்போம் : சீனா

வரிவிதிப்பு தொடர்பாக பேச்சு நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதுகுறித்து பரிசீலிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும் சீனா மீது கூடுதலாக 10 சதவீத வரி விதித்தார். அதன் பின்னர், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரியை அறிவிக்கும்போது மீண்டும்…

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் : பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரிய தண்டனை வழங்க ஒன்றிய அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும் !

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று கட்சி தலைவர் கார்கே தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா, பொதுச்செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:…

பாஜவுடன் கூட்டணிக்கு அதிமுக செயற்குழு ஒப்புதல்: ஒன்றிய அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்!

அதிமுக – பாஜ கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்தார். இதையடுத்து புதிய கூட்டணிக்கு செயற்குழு ஒப்புதல் அளித்ததுடன், ஒன்றிய அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் ஆதரவு அளிப்பது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது மாதிரியே தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை !

தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது மாதிரியே தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மே தினப் பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு மலர்…

பஹல்காம் தாக்குதல் – எங்களுக்கு தொடர்பு இல்லை, பாகிஸ்தானை சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும்’ : இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டி வருவதுடன், அந்த நாட்டுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அதேநேரம் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று நேற்று பாகிஸ்தான் வழக்கம்போல மறுத்து வருகிறது. முன்னதாக அந்நாட்டு ராணுவ செய்தி…