“ECRல் பெண்களின் காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என அவரே ஒப்புக்கொண்டுள்ளார். திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பார்கள்? பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?” என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது”- அமைச்சர் ரகுபதி | TN Law Minister  Raghupathi comments on Law and Order situation of the state - hindutamil.in

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக் கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.

திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.

ECR-ல் அந்த காரை பிடிடான்னு அவரு சொன்னாரு... அதனால் தான் பெண்களை மடக்கி  பிடிச்சேன்”- கைதானவர் வாக்குமூலம்

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது.

திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *